Monday 21 January 2013

சுசியின் அனுபவங்கள் - 4 - பயிற்சிகள்

சுசியும் மற்ற ஆன்மிகவாதிகள் போல எப்போதும் பயிற்சிகள்  பற்றி நல்லபடியாக பேசுவார், அவ்வப்போது சில பயிற்சிகளை செய்வார். சில நாட்கள் கழிந்த பின்னர் ஏனோ பழைய பயிற்சிகளை நிறுத்திவிட்டு புதிதாக சில பயிற்சிகள் செய்வார். பயிற்சிகளை அவர் தனிமையில் செய்தாலும், அவற்றை ரகசியமாக செய்வதில்லை. எனவே அவரிடம் பயிற்சிகள் பற்றி அறிய சில கேள்விகள் கேட்போம்.

ஆன்மிக பயிற்சிகள் என்றால் என்ன?
நம் உடல்களை நல்லபடியாக பாதுகாத்து வைத்துக்கொள்ளவும்; உடல்களின்  திறன்களை அதிகரிக்க செய்யவும்; அதிகரித்த திறன் கொண்ட உடல்கள் கொண்டு பொதுவாக செய்யவியலாத அதிசயம் போன்ற செயல்களை செய்வதற்கும், அனுபவ ஞானிகளால் வரையறுக்கப்பட்ட முறைகளை நாம் தொடர்ந்து பயில்வதே ஆன்மிக பயிற்சிகள் ஆகும்.

உடல்கள்?
நம் முன்னோர்கள், நாம் கண்களால் காணும் இந்த உடல் (பரு உடல்) தவிர மேலும் நான்கு உடல்கள் நமக்கு இருப்பாதாக அறிந்து அறிவுறுத்தியுள்ளனர். மற்ற நான்கு உடல்களை நாம் துவக்கத்தில் நம்பிக்கையால் அறிந்துகொண்டு, பின்னர் சில சரியான பயிற்சிகள் மூலம் அனுபவத்தாலும் உணரமுடியும்.
நம்முடைய மனம், புத்தி போன்றவையும் நம் உடல்களே. நம் பிராண சக்தியும் ஒரு உடலே. இந்த ஐந்து உடல்கள் பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் பஞ்சகோசம் என்றால் என்ன என்று தேடி அறியுங்கள்.

அனைத்து உடற்பயிற்சிகளும் ஆன்மிக பயிற்சிகளா?
பல உடற்பயிற்சிகளும் ஆன்மிக பயிற்சிகளாக ஏற்கக்கூடியவையே.

பொதுவான உடற்பயிற்சிகளுக்கும் ஆன்மிக பயிற்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
பொதுவான உடற்பயிற்சிகள் நம் ஒவ்வொரு உடலையும் தனித்தனியே பார்க்கின்றன. ஆன்மிகப்பயிற்சிகள் ஐந்து உடல்களையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று பார்க்கின்றன.
பொதுவாக உடற்பயிற்சிகள், ஒரு உடலை குறிவைத்து செய்யப்படுகின்றன. அவற்றை செய்யும்போது, பக்கவிளைவாக பிற உடல்களும் பயன்பெறலாம். ஆன்மிக பயிற்சிகள் அனைத்து உடல்களையும் குறிவைத்து செய்யப்படுகின்றன.
பொதுவான உடற்பயிற்சிகள் ஒரு உடலை பலப்படுத்திக்கொண்டே வேறு ஒரு உடலை பலவீனப்படுத்தலாம். நல்ல ஆன்மிகபயிற்சி எந்த உடலையும் பலவீனப்படுத்தாது.

ஆன்மிகப்பயிற்சிகளை யாரிடம் கற்கலாம்?
பயிற்சியை செய்யத்தெரிந்து, சொல்லிக்கொடுக்கவும் தெரிந்த எவரிடமும் கற்கலாம். அவர் நல்லொழுக்கம் கொண்டவராக இருப்பது அவசியம், அவர் ஒழுக்கத்தில் உங்களுக்கு சந்தேகம் வருமாயின் அவரைவிட்டு விலகிவிடுங்கள். அவர் அந்தப்பயிற்சியை பலகாலம் பயின்றவராக இருப்பதும்; அவர் ஒரு பாரம்பரியம் கொண்டவராக இருப்பதும், அவர் தகுதியினை கூட்டும்.

ஆன்மிகப்பயிற்சிகளை பணம் செலவழித்து கற்கலாமா?
உங்களால் செலவு செய்யமுடியும் என்றால் செய்யலாம். தட்சிணை கொடுப்பதும், சிலசமயங்களில் கேட்டு வாங்குவதும் பண்டையகாலம் முதல் நடைமுறையில் உள்ள ஒன்றே.

நமக்கேற்ற நல்ல ஆன்மிக பயிற்சியை அடையாளம் காண்பது எப்படி?
நமக்கு ஏற்படும் அனுபவங்களே நமக்கேற்ற நல்ல ஆன்மிகப்பயிற்சிகளை நமக்கு அடையாளம் காட்டும். நாம் நல்ல பயிற்சிகளை செய்யும்போதும் நல்லனுபவம் தரும், பின்னர் நம் தினசரி வாழ்வின் அனைத்து அனுபங்களின் தரத்தையும் உயர்த்தும்.
நல்லப்பயிற்சிகளை தொடர்ந்து செய்யும்போது, செய்பவர் மட்டுமின்றி அவருடன் தினசரி பழகும் மற்றவர்களும், அவரிடம் ஒரு நல்ல மாற்றத்தை, முன்னேற்றத்தை கவனிப்பார்கள். ('தொடர்ந்து செய்யும்போது' என்பதற்கு காலஅளவு தேவை, அது ஒருவாரம் முதல் மூன்று மாதங்களே. நீங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து பின்னர் அவை நல்ல பயிற்சியல்ல என்று அறிவீர்களேயானால் அதனால் உங்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை)
நம் தினசரி வாழ்வின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவிடாமலோ அல்லது அனுபவிக்க முடியாதபடியோ செய்யும் எந்தப்பயிற்சியும் நல்ல பயிற்சியல்ல.

மந்திர தந்திரங்களும் பயிற்சிகளா?
தந்திரம் என்பதற்கு வேறு அர்த்தங்கள் இருப்பினும், பலகாலமாக நுட்பம் என்கிற பொருளிலேயே ஆன்மிகவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். தந்திரங்களையே நாம் பயிற்சியாக செய்கிறோம். மூச்சை கவனிப்பதும் ஒரு தந்திரமே. நம் முன்னோர்கள் நமக்கு பல தந்திரங்களை அளித்துள்ளனர். ஒரு தந்திரம் பலபடிகள் கொண்டதாகவும் இருக்கலாம், உதாரணத்திற்கு சூரியநமஸ்காரம். தந்திரங்கள் பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் 'விஞ்ஞான பைரவ தந்திரா' எனப்படும் பண்டைய வடமொழி நூலினை  (மொழிபெயர்ப்பினை) தேடி படியுங்கள். அதில் நாம் நினைத்துப்பார்க்க முடியாத பலன்களை தரக்கூடிய எளிதாக தோன்றும் தந்திரங்கள் பல உண்டு.
மந்திரங்களையும் தந்திரங்களில் பயன்படுத்துவது உண்டு. மந்திரங்களுக்கு நம்முடல்கள் தாண்டிய விசயங்களையும் பாதிக்கும் சக்தி உண்டு. எனவே நல்ல குரு அல்லது வழிகாட்டி துணைகொண்டே சில மந்திரங்களை  பயிலவேண்டும்.

பொதுவாக இங்கு ஆசிரமங்களிலும், ஆன்மிக நிறுவனங்களிலும் கற்றுத்தரப்படும் தந்திரங்கள் எந்த வகை?
இத்தகைய நிறுவனங்களில் பொதுவாக பரு உடல் நலம் சம்பந்தப்பட்ட தந்திரங்களே கற்றுத்தரப்படுகின்றன. பரு உடல் அங்கங்கள் கொண்டு செய்வதும், மூச்சுப்பயிற்சிகளும்.
சில இடங்களில் பிராண உடல், விஞ்ஞான உடல் ஆகிய இரண்டுக்கும் பயிற்சியளிக்கக்கூடிய தந்திரங்களும் கற்றுத்தரப்படுகின்றன.
முன்பே சொன்னதுபோல, நல்ல பயிற்சிகள் அனைத்து உடல்களுக்கும் நன்மை தரும்.

பயிற்சி செய்வதற்கான காலநேரமும் அளவும் என்ன?
பயிற்சிக்கான காலநேரமும் அளவும் ஒவ்வொரு தந்திரத்திற்கும் மாறும். சில பயிற்சிகள் நாள் முழுவதும் செய்யலாம். பயிற்சியின் காலஅளவு உங்கள் தினசரி வாழ்வை பாதிக்குமெனில், அதிக அளவு என்பதை அறிக.

பழகிய தந்திரங்களை நிறுத்திவிட்டு புதிய தந்திரங்களை ஏற்கலாமா?
சரியான காரணம் இருக்குமேயானால் கட்டாயம்ஏற்கலாம், ஏற்க வேண்டும்.
உங்களுக்கு ஒத்துவராத தந்திரத்தை நீங்கள் கட்டாயம் நிறுத்தவே வேண்டும். இப்போது நீங்கள் பயிலும் தந்திரத்தைவிட அதிக பலன் தரக்கூடிய தந்திரம் உங்களுக்குக் கிடைத்தாலும் பழையதை நிறுத்திவிட்டு புதியன தொடங்கலாம்.
ஒரு தந்திரம் அனைவருக்கும் சிறந்த பலன்களை தருவதில்லை. அவரவர் அவரவருக்கேற்ப, தற்போதைய நிலைக்கேற்ப தந்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை அவ்வப்போது சீர்தூக்கிப் பார்த்து தேவை என்றால் புதிய தந்திரம் தேட வேண்டும்.
ஒரு தந்திரத்தை கைவிடுவதால் நீங்கள் எந்த தவறும் செய்வதில்லை, அந்த தந்திரத்திற்கோ, அதை கற்பித்தவருக்கோ அல்லது பயிலும் மற்றவர்களுக்கோ நீங்கள் எவ்வித தீங்கோ அல்லது துரோகமோ செய்வதில்லை என்பதை எப்போது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கூட்டம் உங்கள் மீது ஒரு தந்திரத்தை திணித்தாலோ அல்லது ஒரு தந்திரத்தை நீங்கள் கைவிடுவதை அனுமதிக்காமல் மறுத்தாலோ ... உடனடியாக அந்தக்கூட்டதிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்யுங்கள்.

தந்திரங்களை மாற்றலாமா?
பல தந்திரங்கள் பல ஆண்டுகளாக பல ஞானிகளால் ஆராய்ந்து உருவாக்கப்பட்டவை. அவற்றை அப்படியே செய்வதே நல்லது.

குரு அல்லது வழிகாட்டி அவசியமா?
சில தந்திரங்கள் ஆபத்தான பக்கவிளைவுகளை கொண்டவை. அவை வழக்கமாக நம் உடல்களில் உள்ள சக்திகளை தாண்டி வேறு சக்திகளை கையாளும். அப்படிப்பட்ட தந்திரங்களுக்கு குரு அல்லது ஒரு வழிகாட்டி தேவை. பிற சக்திகள் கொண்டு நம் உடல்களையும், வாழ்வையும் மேம்படுத்த செய்யும் பயிற்சிகள் தவிர்க்கப்படவேண்டியவை. (பெரிய கோவில்களில் வைத்து வணங்கப்படும் தெய்வங்களும், உங்கள் குலதெய்வங்களும் ஆபத்தில்லாதவை, நன்மை மட்டுமே செய்யக்கூடியவை.)
உடல் அங்கங்கள் கொண்டு உடல்களுக்குள் செய்யப்படும் பயிற்சிகள் பொதுவாக ஆபத்தில்லாதவை, அவை தவறாக செய்யப்பட்டாலும், உடல்பிடிப்பு போன்ற சிறிய பாதிப்பையே ஏற்படுத்தும்.
குரு அல்லது வழிகாட்டியை தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. தந்திரங்களால் வரும் தீய பாதிப்புகளைவிட தவறான ஆட்களால் வரும் தீய பாதிப்புகளே அதிகம்.

No comments:

Post a Comment