Wednesday 3 April 2013


கண் பார்வை கூர்மைக்கு...

குறிப்பாக ஐந்து முதல் பதினைந்து வயது வரையுள்ள வளரும் குழந்தைகள் தினமும் பத்து அல்லது பதினைந்து சூரியகாந்தி விதைகளை உரித்து தின்பதால் கண் பார்வை கூர்மையாகும்.

தினமும் இரண்டு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துவதுடன், இதயத்திற்கும் வலுவூட்டுகிறது.

காய்ச்சற்கட்டி (Spleen) என்னும் நோய் மிகவும் கொடுமையானது. இதற்கு பப்பாளிப்பழத்தையும், சப்பாத்திக் கள்ளியின் பழத்தையும் வேளை மாற்றித் தந்து வந்தால் விரைவில் குணம் காணலாம்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் குறையும்.

நெல்லிக்கனியின் சாற்றோடு பசுவின் நெய் ஒரு கரண்டியும் சேர்த்து காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையும், மூளை தெளிவும், நரம்புகளுக்கு வன்மையும் உண்டாகும்

No comments:

Post a Comment