Wednesday 27 November 2013

பாவங்கள் தீர புனித நீராடு! எங்கே ? நெக்கு நெக்கு உள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலும் திரு மேனி திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப் புக்கு நிற்ப தென்று கொல்லே என் பொல்லா மணியை புணர்ந்தே நமது கண்மணியில் உணர்வை வைத்து தவம் செய்தால் நெகிழ்ச்சி உருவாகும்! நெகிழ்ந்து கண்ணீர் அருவியில் நாம் குளிக்கனும். நாம் செய்த பாவங்கள் தீர புனித நீராட வேண்டும் ! உண்மையான புனித நீராடல் ஒவ்வொருவரும் அவரவர் கண்ணீர் அருவியில் குளிப்பதே!! இப்படிப்பட்ட தவம் நின்று கொண்டே செய்யலாம்! இருந்து கொண்டே செய்யலாம், படுத்துக்கொண்டே செய்யலாம் நடந்து கொண்டே செய்யலாம் இது தான் ஒப்பற்ற ஞான சாதனை! வேறு எந்த சாதனையும் இருந்து-ஆசனம் அமைத்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்பர்! எங்கும் இருக்கும் கடவுளை எல்லா காலத்திலும் இருக்கும் கடவுளை எங்கே இருந்து எப்படி கும்பிட்டால் என்ன?! இராகு காலம் எமகண்டத்திலும் கும்பிடலாமே!? எந்த திசையை பார்த்தும் கும்பிடலாமே! நின்றோ இருந்தோ படுத்தோ நடந்தோ தவம் செய்யலாமே! உன்னுள் இருக்கும் இறைவனை வணங்க எந்த தடையும் இல்லை! எதுவும் யாரும் நம்மை தடுக்க முடியாது !அதுதான் ஞானம்! இறைவனை நாடி நம் மெய்யுள்ளே கூடி பாடலாம் ஆடலாம் வாழ்த்தலாம் மகிழலாம் யார் நம்மை தடுக்க முடியும்?! இப்படி எதையாவது செய்யுங்கள். உங்கள் கண்கள் திருவடி சிவந்து கோவை பழமாக வேண்டும். தவத்தால் கண்களில் சுத்த உஷ்ணம் மிகுதிப்பட வேண்டும்! உங்கள் உடல் சிலிர்க்க வேண்டும். கண்ணீர் மழை பொழிய வேண்டும். உள்ளே போக கண்மணியோடு நீங்கள் சேர வேண்டும்! உங்களுக்கு தேவை விழிப்புணர்வு! அதாவது விழியில் புணர்ச்சி! அப்போது தான் ஆனந்த அனுபவங்கள் கை கூடும்! விழியில் உணர்வை வையுங்கள்! விழிப்புணர்ச்சி பெறுவீர் பெற்று பேரின்பம் அடைவீர் ! திருவாசக மாலை எட்டாம் திருமுறை

No comments:

Post a Comment