Saturday 18 May 2013

நான் 'ஆ' சப்தம் உச்சரிப்பதால் என் மேல் ஏற்படும் தாக்கம் என்ன?

சத்குரு: நீங்கள் 'ஆ' சப்தம் உச்சரிக்கும்போது உங்கள் உடலினுடைய பராமரிப்பு மையம் தூண்டப்படுகிறது. இது மணிபூரக சக்கரம் அல்லது தொப்புள் பகுதி. மணிப்பூரக சக்கரம் என்பது உங்கள் தொப்புளுக்கு முக்கால் அங்குலம் கீழே உள்ளது. நீங்கள் உங்கள் தாயின் கருப்பையில் இருந்தபோது உங்களுடைய பராமரிப்புக் குழாய் இங்குதான் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழாய் இப்போது இல்லையென்றாலும், பராமரிப்பு மையம் உங்களின் தொப்புளில்தான் உள்ளது.
உங்களுக்கு, ஸ்தூல உடல் ஒன்று இருப்பது போல, சக்தி உடல் ஒன்றும் உள்ளது. இந்த சக்தியை நாம் பிராணா என்கிறோம். இந்தப் பிராணா, உடலில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட சில அமைப்புகளின் மூலமாக உடல் முழுவதும் நகர்கிறது. இது தாறுமாறாக நகர்வதில்லை. மொத்தம் 72,000 வழிகளில் அது நகர்கிறது. இன்னொரு விதமாகச் சொன்னால், இந்த உடலில் உள்ள 72,000 பாதைகள் வழியாக இந்த சக்தி பாய்கிறது எனலாம். இந்தப் பாதைகள் அல்லது வழித்தடங்கள்தான் நாடிகள் எனப்படுகின்றன. இந்த நாடிகள் ஸ்தூலநிலையில் இல்லை. இந்த உடலை அறுத்துப் பார்த்தால் அந்த நாடிகளை உங்களால் அங்கு பார்க்க முடியாது. நீங்கள் விழிப்புணர்வில் வளர, வளர உங்கள் சக்தி ஏனோதானோவென்று நகர்வதில்லை; அது நிர்மாணிக்கப்பட்ட பாதைகளில்தான் செல்கிறது என்பதை அறிவீர்கள்.
'ஆ' சப்தத்தின் அதிர்வுகள் மட்டுமே உடல் முழுவதும் பரவக்கூடியதாய் உள்ளது, ஏனெனில், மணிப்பூரக சக்கரத்தில்தான் உடலின் 72,000 நாடிகளும் ஒன்று கூடிப் பிரிகின்றன. நீங்கள் 'ஆ' சப்தம் உச்சரிக்கும்போது, உங்கள் தொப்புளுக்கு முக்கால் அங்குலத்துக்குக் கீழிருந்து அதிர்வுகள் தொடங்கி உடல் முழுவதும் பரவுவதை உணர முடியும். இந்த அதிர்வு நம் உடலின் பராமரிப்பு மையத்தை சக்தியூட்டுவதற்கு உறுதுணையாய் இருக்கும். இந்த மையம் தூண்டப்படுவதன் மூலம் ஆரோக்கியம், வளம், ஆற்றல் மற்றும் நல்வாழ்வு கிடைக்கப் பெறும்..sadhguru

No comments:

Post a Comment