Saturday 18 May 2013

Nandakumar Kumar shared தமிழும் சித்தர்களும் Thamil.Siththars's photo.
கோவில்
------------

"கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். அடுத்து ஊரில் உள்ள எல்லாவித வீடுகள் மாளிகைகளை காட்டிலும் கோவிலானது அளவில் பெரியதாகவும், உயரமான கோபுரத்தோடும் அமைந்திருக்கும். இதனால் கன்னிமூலை பாரமாகவும் , உயரமாகவும் இயற்கையாகவே அமைந்துவிடும். இப்படி அமைத்து விட்டாலே மற்றத் திசைகளுக்கு உரிய சக்தி தானாகவே வந்துவிடும்.

ஒரு ஊரின் கன்னி மூலையில் கோவில் அமைவதால் மட்டும் அந்த ஊருக்கு சிறப்புக்கள் வந்து விடாது. அந்தக் கோவிலில் ஆறுகால பூஜைகள் நடைபெறவேண்டும். ஊர்முழுக்க கேட்கும்படி மணிச் சப்தம் ஒலிக்க வேண்டும் .அந்தக் கோயிலுக்கு என்று மரத்தால் ஆன தேர் ஒன்றும் கட்டாயம் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோயிலுக்கு ஈசான்ய பாகத்தில் திருக்குளம் அமைந்திருந்தால் அந்த ஆலயம் காலத்தால் நாளுக்கு நாள் அருள் அலைகள் பெருகி சிறப்பு மிகுந்த ஆலயமாக திகழும். அது மாத்திரமல்ல, அந்தக் கோவிலின் கோபுர கலசத்தில் தான் எல்லாவித சிறப்புகளும் ஒளிந்துள்ளன. அதன் வழியாகத்தான் ஊரில் அமைதியும் செல்வமும் பெருக்கெடுக்கச் செய்யும் சக்தி மிகுந்த அலைகள் பரவுகின்றன .

அந்த காலத்தில் அரசர்கள் தான் கிராமங்களை வடிவமைத்தனர். அப்படி வடிவமைக்கும் பொது ஆறு பாயும் இடமாகப் பார்த்து கிராமங்களை நிறுவினார்கள். அப்படி வடிவமைக்கும் போது வடக்கு பக்கம் ஆறு ஓடும்படி பார்த்துக்கொண்டு, ஆற்றுக்குத் தென் பக்கத்தில் ஊரை வடிவமைப்பார்கள் பெரும்பாலும் செவ்வகமாகவே வடிவமைப்பார்கள்.

இப்படி இருக்கும் போது தென் புறத்தில் மலையோ, காடோ இருந்தால் அந்த ஊரை மிக விசேசமாக கருதுவார்கள். பெரும்பாலும் ஊரில் எல்லோருமே வளமோடு தான் இருப்பார்க்கள். அப்படி வடிவமைக்கப்படும் ஊரின் சிறப்பையும் ஏதாவது ஒரு விதத்தில் குறித்து வைப்பார்கள். எழுதி வைப்பது ஒரு விதம், கோவிலுக்குள் யாருக்கும் இலகுவில் புரியாத சங்கேத சொற்களில் அல்லது சிற்பங்கள் மூலமாகச் செதுக்கி வைப்பது இன்னொரு விதம். குறிப்பாக ஒரு ஊரின் கோவிற் கோபுரம் அந்த ஊரைப்பற்றிய நன்மை, தீமைகளைச் சொல்லும் விதமாக இருக்கும். இதைப் பார்த்து அறிந்துணர நமக்குப் பட்டறிவு வேண்டும் .

பொதுவில் ஊரின் கன்னி மூலையில் கோயிலைக் கட்டினால், அக்னி பாதத்தில் மயானம் வரும்படி பார்த்துக் கொண்டார்கள். அதே போல ஈசான்ய மூலையில் ஆறும் குளமும் அமையும் படியும் பார்த்துக் கொண்டனர். அது வழியாகவே ஊருக்குள் வந்து செல்லும் பாதையை வடிவமைத்து கொண்டனர். வாயு மூலையில் பெரிய தோட்டம் மற்றும் மைதானம் அமைத்து அங்கே உடற்பயிற்சிகள் செய்ய வழிவகை செய்தனர். ஊரின் நட்ட நடுவில் ஒரு பெரிய கல் மண்டபம் எழுப்பி அங்கிருந்து நான்கு புறமும் நான்கு திசைநோக்கிச் செல்லத் தெருக்களை உருவாக்கினார்கள். கல் மண்டபத்தை சுற்றி வேலிபோட்டு அதன் நடுவில் பிரம்ம பாகத்தில் எவர்காலும் படாதபடி பார்த்துக் கொண்டனர்.

இப்படி மிக நுட்பமாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட எந்த ஒரு ஊரும் காலத்தால் வளராமல் போனதேயில்லை. இப்படிப் பட்ட ஊர்களில் வாழ்பவர்கள் ஒற்றுமையுடனும் நோய் நொடி இன்றியும் வாழ்ந்தனர். இந்த ஊரின் தேவையான ஆக்க சக்தியைக் கோயில் கலசம் தவறாமல் வளங்கிக் கொண்டிருக்கிறது. இருந்தும் காலத்தால் சில கோயில்கள் பாழ்பட்டுப் போயின. அதாவது திட்டமிட்டு சிலர் அந்தக் கோயில்களை நாசம் செய்தனர். அப்படிச் செய்ததன் பின்னால் மிகபெரிய சுயநலம் ஒளிந்திருக்கிறது. வரப்போகும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மீண்டும் தளிர்பெறுமெனச் சித்தவேடுகளிற் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தர்களை வரவேற்கத் தயாராகுவோம். நன்றி.

வழி: மதன்
கோவில்
------------

"கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். அடுத்து ஊரில் உள்ள எல்லாவித வீடுகள் மாளிகைகளை காட்டிலும் கோவிலானது அளவில் பெரியதாகவும், உயரமான கோபுரத்தோடும் அமைந்திருக்கும். இதனால் கன்னிமூலை பாரமாகவும் , உயரமாகவும் இயற்கையாகவே அமைந்துவிடும். இப்படி அமைத்து விட்டாலே மற்றத் திசைகளுக்கு உரிய சக்தி தானாகவே வந்துவிடும்.

ஒரு ஊரின் கன்னி மூலையில் கோவில் அமைவதால் மட்டும் அந்த ஊருக்கு சிறப்புக்கள் வந்து விடாது. அந்தக் கோவிலில் ஆறுகால பூஜைகள் நடைபெறவேண்டும். ஊர்முழுக்க கேட்கும்படி மணிச் சப்தம் ஒலிக்க வேண்டும் .அந்தக் கோயிலுக்கு என்று மரத்தால் ஆன தேர் ஒன்றும் கட்டாயம் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோயிலுக்கு ஈசான்ய பாகத்தில் திருக்குளம் அமைந்திருந்தால் அந்த ஆலயம் காலத்தால் நாளுக்கு நாள் அருள் அலைகள் பெருகி சிறப்பு மிகுந்த ஆலயமாக திகழும். அது மாத்திரமல்ல, அந்தக் கோவிலின் கோபுர கலசத்தில் தான் எல்லாவித சிறப்புகளும் ஒளிந்துள்ளன. அதன் வழியாகத்தான் ஊரில் அமைதியும் செல்வமும் பெருக்கெடுக்கச் செய்யும் சக்தி மிகுந்த அலைகள் பரவுகின்றன .

அந்த காலத்தில் அரசர்கள் தான் கிராமங்களை வடிவமைத்தனர். அப்படி வடிவமைக்கும் பொது ஆறு பாயும் இடமாகப் பார்த்து கிராமங்களை நிறுவினார்கள். அப்படி வடிவமைக்கும் போது வடக்கு பக்கம் ஆறு ஓடும்படி பார்த்துக்கொண்டு, ஆற்றுக்குத் தென் பக்கத்தில் ஊரை வடிவமைப்பார்கள் பெரும்பாலும் செவ்வகமாகவே வடிவமைப்பார்கள்.

இப்படி இருக்கும் போது தென் புறத்தில் மலையோ, காடோ இருந்தால் அந்த ஊரை மிக விசேசமாக கருதுவார்கள். பெரும்பாலும் ஊரில் எல்லோருமே வளமோடு தான் இருப்பார்க்கள். அப்படி வடிவமைக்கப்படும் ஊரின் சிறப்பையும் ஏதாவது ஒரு விதத்தில் குறித்து வைப்பார்கள். எழுதி வைப்பது ஒரு விதம், கோவிலுக்குள் யாருக்கும் இலகுவில் புரியாத சங்கேத சொற்களில் அல்லது சிற்பங்கள் மூலமாகச் செதுக்கி வைப்பது இன்னொரு விதம். குறிப்பாக ஒரு ஊரின் கோவிற் கோபுரம் அந்த ஊரைப்பற்றிய நன்மை, தீமைகளைச் சொல்லும் விதமாக இருக்கும். இதைப் பார்த்து அறிந்துணர நமக்குப் பட்டறிவு வேண்டும் .

பொதுவில் ஊரின் கன்னி மூலையில் கோயிலைக் கட்டினால், அக்னி பாதத்தில் மயானம் வரும்படி பார்த்துக் கொண்டார்கள். அதே போல ஈசான்ய மூலையில் ஆறும் குளமும் அமையும் படியும் பார்த்துக் கொண்டனர். அது வழியாகவே ஊருக்குள் வந்து செல்லும் பாதையை வடிவமைத்து கொண்டனர். வாயு மூலையில் பெரிய தோட்டம் மற்றும் மைதானம் அமைத்து அங்கே உடற்பயிற்சிகள் செய்ய வழிவகை செய்தனர். ஊரின் நட்ட நடுவில் ஒரு பெரிய கல் மண்டபம் எழுப்பி அங்கிருந்து நான்கு புறமும் நான்கு திசைநோக்கிச் செல்லத் தெருக்களை உருவாக்கினார்கள். கல் மண்டபத்தை சுற்றி வேலிபோட்டு அதன் நடுவில் பிரம்ம பாகத்தில் எவர்காலும் படாதபடி பார்த்துக் கொண்டனர்.

இப்படி மிக நுட்பமாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட எந்த ஒரு ஊரும் காலத்தால் வளராமல் போனதேயில்லை. இப்படிப் பட்ட ஊர்களில் வாழ்பவர்கள் ஒற்றுமையுடனும் நோய் நொடி இன்றியும் வாழ்ந்தனர். இந்த ஊரின் தேவையான ஆக்க சக்தியைக் கோயில் கலசம் தவறாமல் வளங்கிக் கொண்டிருக்கிறது. இருந்தும் காலத்தால் சில கோயில்கள் பாழ்பட்டுப் போயின. அதாவது திட்டமிட்டு சிலர் அந்தக் கோயில்களை நாசம் செய்தனர். அப்படிச் செய்ததன் பின்னால் மிகபெரிய சுயநலம் ஒளிந்திருக்கிறது. வரப்போகும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மீண்டும் தளிர்பெறுமெனச் சித்தவேடுகளிற் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தர்களை வரவேற்கத் தயாராகுவோம். நன்றி

No comments:

Post a Comment