Friday 20 April 2012

சிவ பூஜையில் கரடி நுழைந்தாற்போல்...

செய்யும் காரியத்திற்கு பிறர் திடீரென்று இடையூறு ஏற்படுத்திவிட்டால் இந்த பழமொழியை உதாரணமாக கூறும் வழக்கம் உள்ளது. ஆனால், இந்த பழமொழிக்கு இது பொருள் அல்ல.

இதில் உள்ள கரடி என்பது மிருகத்தை குறிப்பது அல்ல. கரடி என்பது ஒருவித பறை. அதாவது, மிகுந்த ஓசை தரக்கூடிய இசை கருவி. சிவ பூஜையில் இந்த கருவியைக் கொண்டு ஓசை எழுப்பப்படும் என்பதால் அப்படி சொன்னார்கள். நாம் தான் பொருளை மாற்றி விட்டோம்.

பழமொழிகளை அவரவர் விருப்பத்திற்குத் தகுந்தபடி எல்லாம் மாற்றி விட்டார்களே என்கிறீர்களா? எதையும் தங்களுடைய தேவைக்கேற்ப மாற்றம் செய்து கொள்ளும் திறன் அதிகமாகத் தவறுக்கேப் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment