Thursday 2 April 2015

ஏழு மையங்கள் / ஏழு சக்கரஸ் /
ஏழு நப்ஸ் . 9 மைய தவம் .
****************************************
இந்த ஏழு மையங்களை தூய்மை படுத்தாமல் , ஆத்மீகத்தில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாது , முதலில் இந்த மையங்களை உடலில் தெரிந்து கொள்ளா வேண்டும். அந்த அந்த மய்யத்திலேயே நினைவை செலுத்தி தவம் இயற்ற வேண்டும். அப்போது தான் அந்த மையங்கள் சுத்தம் அடைந்து , ஏழு நப்ஸ்களையும் ,
சீர் செய்து நப்ஸ் காமிலாவில் இருந்து
( துரியம் ) மேலும் உயர்ந்து சுத்தவெளியில் விரிந்து
பேரின்பத்தை அடையாளம் .
பிறந்த பயனையும் அடைய முடியும் .
காமிலான ஷெய்குவின் கரம்பிடித்து கண்களால் நைன தீட்சையும் / ஸ்பரிசதீட்சையும் , பெற்றாலும் நீங்கள் எந்த பயிச்சியும் செய்யாமல்
Enlightenment முக்தி பெற முடியாது.
( குரு வழி மட்டுமே காட்டுவார் நாம் தான் நடக்க வேண்டும் . )
1 மூலாதாரம் , நப்ஸ் அம்மார ,
நிறம் சிவப்பு தஸ்பிஹ் , லா இலாஹ இல்லல்லாஹூ.
இடம் முதுகுத்தண்டின் முனை
(கருமையம்) ( தவ நேரம் 3 நிமிடம் )
2 சுவாதிஷ்டானம் , நப்ஸ் லவ்வாமா , நிறம் ஆரஞ்சு , தஸ்பிஹ் , இல்லல்லாஹ் , இடம் அடி வயிறு
( தவ நேரம் 3 நிமிடம் )
3 மணிப்பூரகம் , நப்ஸ் முல்ஹிமா , நிறம் மஞ்சள் , தஸ்பிஹ் , அல்லாஹூ , இடம் தெப்புள் குழிக்கு மேல்
( தவ நேரம் 3 நிமிடம் )
4 அனாகதம் , நப்ஸ் முத்மயின்னா , நிறம் பச்சை, தஸ்பிஹ் , ஹூ
இடம் , நெஞ்சுகுழி , தஸ்பிஹ் ,
( தவ நேரம் 3 நிமிடம் )
5 விசுத்தி , நப்ஸ் ராழியா நிறம் நீலம் , தஸ்பிஹ் , யாஹக் இடம் தொண்டையில் முடிச்சு
( தவ நேரம் 3 நிமிடம் )
5 ஆக்கினை , நப்ஸ் மர்ளியா , நிறம் கிரே ,தஸ்பிஹ் , யாஹையு யாகையூம் , இடம் புருவமத்தி
( தவ நேரம் 5 நிமிடம் )
6 துரியம் , நப்ஸ் காமிலா
நிறம் வைல்ட் , தஸ்பிஹ் யாகஹ்ஹார் , இடம் உச்சந்தலை ,
( தவ நேரம் 5 நிமிடம் )
துவதசங்கம் உச்சிக்கு மேல் 12 " அங்குலம்
சந்திரனில் சற்று விரந்து
தவம் செய்து பிறகு
சூரியனில் விரிந்து பிறகு
சக்திகளத்தில் தவம் இயற்றி பிறகு
துரியாதீதம் , சுத்தவெளி , தூயவெளி / பிரம்மம் / ஆற்றல்களம் /சிவகளம்/
அநாதி / அல்லாஹ்.
இந்த இடத்தில் கரைந்து விட வேண்டும் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கலாம் , பிறகு படிப்படியாக இறங்கி ஆக்கினை சக்ராவில் இருந்து தவத்தை நிறைவு செய்யவும்.
இந்த முறையில் தியானம் வாரத்திற்கு இருமுறை செய்யவும்.
இப்படி செய்து வந்தால் நப்ஸ்கள் சீர் செய்யபட்டு அனைத்து விதமான
உணர்சிகளும் நமக்கு அடக்கம்.
இல்லை என்றால் உணர்ச்சிகளுக்கு
நாம் அடக்கம்.
'ஹக்' அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment