Friday 1 May 2015

இயற்கை வைத்தியம்..!
பல்லில் கசியும் ரத்தத்தை நிறுத்த எளிய வைத்தியம் இருக்கிறது. ஒரு கடுக்காய், அதில் பாதி அளவு சீரகம், சிறிது உப்பு சேர்த்து பொடியாக்கி பல் தேய்த்து வந்தால் ரத்தம் கசிவது நிற்கும்.
ஏலக்காயைப் பொடி செய்து 2 கிராம் அளவு எடுத்து தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள். இதை சாப்பாட்டுக்குப்பின் உண்டு வந்தால் அஜீரணம், வாந்தி, குமட்டல் மற்றும் கர்ப்பகால வாந்தி போன்றவை சரியாகும்.
கண்ணுக்கு கீழே சிலருக்கு கருவளையம் இருக்கும். இதைப் போக்க கசகசா ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு அரை ஸ்பூன், பாதாம்பருப்பு ஒன்று எடுத்து பாலில் ஊற வைத்து அரைத்து பூசி வந்தால் குணம் கிடைக்கும்.
மூட்டு வலி உள்ளவர்கள் தேன் ஒரு பங்கு, 2 மடங்கு வெதுவெதுப்பான நீர், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து குழைத்து பூசினால் அடுத்த சில நிமிடங்களில் வலி விலகும். கூடவே ஒரு கப் வெந்நீரில் 2 டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்த்து தினமும் பருகி வந்தால் மூட்டு வலி குணமடையும்.
மஞ்சள்தூளை நீர் விட்டு கலந்து, தூய்மையான பருத்தி துணியில் நனைத்து ஊற வைத்து, நிழலில் காயவைக்க வேண்டும். நன்றாக உலர்ந்த அந்த துணியால் கண்களைத் துடைத்து வந்தால், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். இதே துணியை புண்களின்மீது வைத்து கட்டினால் புண்கள் ஆறும்

No comments:

Post a Comment