Thursday 19 December 2013

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி ! ஒத்த பைசா கூட செலவில்லாமல் ஒரு நாளைக்கு 50 கிமீ வரை செல்லும் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் சோலார் காரை பெங்களூரை சேர்ந்த இளைஞர் வடிவமைத்து அசத்தியுள்ளார். பெங்களூரை சேர்ந்தவர் சையது முசாக்கீர் அகமது. ஆட்டோமொபைல் ஆர்வலரான இவர் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில்தான், எரிபொருள் பிரச்னையால் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் பிரச்னைகளை கருத்தில்க்கொண்டு புதிய காரை வடிவமைக்க முடிவு செய்தார். அதன்படி, சுற்றுச் சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாத, முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் காரை வெற்றிகரமாக வடிவமைதத்து அசத்தியுள்ளார். இது கான்செப்ட் மாடல் என்றாலும், ஸ்பான்சர் கிடைத்தால் வணிக ரீதியில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் கூறுகிறார். இதுகுறித்து சையது முஜாகீர் அகமது கூறுகையில்," இந்த காரில் முன்பக்க பேனட், கூரை மற்றும் பின்பகுதியில் மூன்று சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து பகல் வேளையில் சூரிய சக்தியிலிருந்து பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் மூலம், ஒரு நாளைக்கு 50 கிமீ தூரம் ஒத்த பைசா செலவில்லாமல் செல்ல முடியும். ஸ்பான்சர் கிடைத்தால் இந்த காரை மேம்படுத்தி வணிக ரீதியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த காரை பிரபலப்படுத்துவதற்காக பெங்களூருவிலிருந்து கொச்சி வரை 600 கிமீ தூரம் சென்று வந்துள்ளேன். மேலும், ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் செய்யவதற்காக இந்த காரில் டெல்லி செல்லவும் திட்டமிட்டுள்ளேன். 50 கிமீ.,க்கு மேலும் பயணம் செல்ல வேண்டியிருந்தால் வீட்டு மின்சாரத்தை சார்ஜ் செய்தும் செல்லும் வகையில் பிளக் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார். இந்த இளம் சாதனையாளரின் திட்டத்தை ஊக்குவிக்க விரும்புவோர் பின்வரும் இமெயில் மற்றும் மொபைல்போன் நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம். solarahmed1@yahoo.com என்ற இமெயில் முகவரியிலும், 9845229757 என்ற மொபைல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். நன்றி, பயனுள்ள தகவல்

No comments:

Post a Comment