Monday 9 February 2015

மூளைப் பாதுகாப்பு அரண்கள் - எவை?...........
1. தூங்கும்போது சிலர் தலையணையில் தலை வைத்து முகத்தையும் - போர்வை கொண்டு இழுத்து மூடிக் கொண்டு தூங்குகிறார்கள்.
இது மூளையைப் பாதிக்கும், நல்ல காற்றுத் தேவை குறைகிறது; தூய்மை யற்ற காற்று உள்ளே புகுந்து மூளையைக் கெடுக்கிறது!
அதுபோலவே, நம் உடல் நிலை சரியாக இல்லாதபோதும்கூட சிலர் - அவர்கள் பணிப் போதையாளர்கள் (Workaholic) ஆகி பழக்கப்பட்ட காரணத்தினால், கடுமையான பணி - படித்தல், எழுதுதல், சிந்தித்தல் - இவைகளைச் செய்தால், பாரம் இழுக்க முடியாத இயந்திரமாக மூளை பலவீன மடையும் வாய்ப்பு அதிகம்.
2 . புகைப் பிடித்தல் - இன்றைய இளைஞர்களிடம் மலிந்துள்ள ஒரு மகத்தான தீய பழக்கம்!
புற்று நோய் வந்து ஆயுளைப் பறிப்பதுபற்றிய தகவல்களை அறியாத வர்களா இவர்கள்? இருந்தும் - தெரிந்தே விளக்கை கையில் வைத்து, பாழுங்கிணற்றில் விழலாமா?
இப்பழக்கத்தால் மூளைச் சுருங்கிச் சுருங்கி, அல்சைமர்ஸ் Alzheimer என்ற மறதி நோய்க்கு சிவப்புக் கம்பளத்தை விரித்து வரவேற்கும் நிலை அல்லவா ஏற்படுகிறது

No comments:

Post a Comment