Tuesday 12 April 2016

தீராத ஜென்ம பாவம் போக்கும் வில்வ மரம்
வில்வ மரத்தின் சிறப்புகள்
வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது. வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். இதன் தழை ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய பயன்படுகிறது.
தீர்த்தம்
வில்வ மரங்கள் குறிப்பாக சிவஸ்தலங்களில் மட்டுமே அதிகம் வளர்க்கப் படுகின்றன. வில்வ இலையுடன் தண்ணீரை கலந்தால் அது புனித நீராக ஈஸ்வரன் கோயில்களில் பயன்படுத்தப் படுகிறது.
வில்வ இலை பூஜை
சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது. ஆதலால் வில்வ மரங்களில் கிடைக்கும் இலைகள் ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய பயன்படுகிறது. வில்வ இலைக்கு ஒரு தனிச்சிறப்பும் உள்ளது, ஒருமுறை பூஜைக்கு உபயோகித்த வில்வ இலைகளை அலம்பி தூயமைப்படுத்தி மறுபடியும் பூஜைக்கு உபயோகப்படுத்தலாமாம்.
எது பூஜைக்கு ஏற்ற வில்வம்
பூஜைக்கு பரிக்கும் போது குளித்து உடல் சுத்தத்தோடு இருப்பதோடு மட்டும் உள்ளத் தூய்மையோடு பரித்தல் வேண்டும். ஒவ்வோரு இலையை பரிக்கும் போது சிவ நாமத்தை கூறியவாறு பரித்தல் வேண்டும். அசுத்தமான, சுடு காடு ஓரங்களில் இருக்கும் மரங்களில் இருந்து பரித்தல் கூடாது.
வில்வ மரம் வளர்ப்பு
வில்வ மரத்தை வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய மரங்களில் ஒன்று. அவ்வாறு வளர்க்கப் படும் தெய்வீக தன்மை பொருந்திய மரங்களை தீட்டுள்ள பெண்களோ அல்லது தீட்டு விசேசங்களுக்கு சென்று வந்து குளிக்காமல் நிழலுக்காக அம்மரத்தடியில் நிற்பதுமே பாவமாகும். முடிந்தால் பசும் பால் கலந்து நீர் ஊற்றி வளர்ப்பது சிறப்பு. வில்வ மரத்தடியில் மலர்த்தூவி விளக்கேற்றி வழிபடுதல் மிகச் சிறப்பு.
ஜீவ வழிபாடு
வில்வ மரத்தை முதன் முதலில் வீட்டில் வைப்பர்கள், செடியை வைத்து பின் பூமி தோஷம் நீங்க விபூதியை சுத்த நீரில் கலந்து புதிதாக வைத்த வில்லவ மரத்தை சுற்றி தெளித்து ஓம் மூலி ஜீவலட்சுமி மூலி மகாதேவ மூலி உன் உயிர் உடலில் சேர்ந்து ஜீவனாயிருக்க சுவாகா என்று செல்லுக.
வில்வ மரம் வழிபாடு
பௌர்ணமி நாள், வெள்ளிக் கிழமைகளில் லட்சுமி துதி கூறி கற்கண்டு, தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வழிபடலாம். வில்வ விருட்சம் முன் அமர்ந்து விநாயகரை வணங்கி பிறகு
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் வில்வ ரூபிண்யை சௌபாக்ய லட்சுமியை தனதாண்ய கர்யை நமோ நம!
என்று துதிப்பதால் (16, 32, 54, 108 எண்ணிக்கையில்) அனைத்து வளமும் பெருகும்.
நரகமில்லை
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
ஒரு வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும்.
வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.
பாவம் நீக்கி பலன்தரும் வில்வ மரம்.
ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்..
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய நற்பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
வில்வ மரம் இருக்கும் இடம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும்.
வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.
ஒரு வில்வ தனத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது.
இதை வளர்த்து வரும் அனைவருமே நலமாக இருப்பதாக கூறி உள்ளனர். வில்வம் வளர்த்தால் செல்வம் வளரும்.
வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி நிரந்தரமாக வசிப்பாள்.
சிவ பூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.
காசி முதல் ராமேஸ்வரம் உள்ள சிவ ஸ்தலங்களை சென்று வந்த பலன் உண்டாகும்.
ஒரு வில்வ இலை ஒரு தங்க பூவிற்க்கு சமம், ஒரு வில்வ தளம் சிவனுக்கு அர்பித்தால். மகா பாவங்களும் விலகி சகல பாக்கியங்கள் உண்டாகும்.
எவ்வித உயர்ந்த தேவலோக தங்க பூவும் வில்வத்திற்க்கு இணையாக முடியாது என்று கூறுகின்றனர். வில்வத்தினால் சிவ பொருமானுக்கு பூஜை செய்தால் சகல சக்திகளை தனுக்குள் கொண்ட சிவபொருமான் மிகவும் திருப்தி அடைகிறான் அவ்வாறு வணங்கும் பக்தனுக்கு வறுமையை தொலைத்து அவனது விருப்பங்களை நிறைவேற்றி வைக்கிறது வில்வம் மரம்.
அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டாகும்.
கொலை செய்வதையே தொழிலாக கொண்டவர்களும் வில்வத்தை பற்றிக் கொண்டால் அவர்கள் பாவம் எல்லாம் தொலையும், உலகுக்குப் பொரும் பயனை விளைவிப்பார்கள் ஆகிவிடுவார்கள் என்று திருக்களத்தி புராணம் கூறுகிறது.
வேடனுக்கு மோட்சம்
ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வரவே அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ்ந்த பின்னும் மரத்தடியில் படுத்துக் கொண்டு புலி நகர்வதாயில்லை. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான் வேடன்.
விடிந்து நெடுநேரமாகிய பின்னும் கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம்.
அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது. பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை இன்றும் சிவராத்திரி அன்று கூறப்படுகிறது
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment