Saturday, 9 April 2016அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்
விநாயகரின்மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங் கணபதயே
வர வரத ஸ்ர்வ ஜனம் மே வசமானய ஸ்வாஹா
இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.
அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.
கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.
கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.
வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரை சனி, அஷ்டமச் சனி இலிருந்து தப்பிக்கலாம். இதைப் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
உச்சிஷ்டகணபதிமந்திரம்
ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய, லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம்
கம் கே கே ஸ்வாஹா
வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.
கடன்தீரகணபதிமந்திரம்
ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம்
ஹூம் பட் ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம் மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரே சாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா
கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.
மஹா ஹஸ்தி விநாயகர்
பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.
ஓம் ஆதூன இந்த்ராக்ஷீ மந்தம் சித்ரம் க்ராபம் ஸங்க் ரூபாய
மஹா ஹஸ்தி தக்ஷ்ணேன
வாஞ்சா கல்ப லதா கணபதி
நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.
பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
ஓம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
தத் ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸ கஸல ஹ்ரீம் பர்க்கோதேவஸ்ய தீமஹீ
வரவரத சவுஸ ஹல ஹ்ரீம்
த்யோயோநஹ் ப்ரசோதயாத்
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
விநாயகப் பெருமானின் வழிபாட்டில் சதுர்த்தி என்னும் திதி முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறைக்கு ஒன்றும் தேய்பிறைக்கு ஒன்றுமாக இரண்டு சதுர்த்திகள் வரும். அவற்றில் மிகவும் முக்கியமானதாக ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே கருதி வருகிறோம். நாம் விநாயகச் சதுர்த்தி என்று விமரிசையாகக் கொண்டாடி வருகின்றோம். அதன் பின் வரும் ஒவ்வொரு வளர்பிறைச் சதுர்த்தியையும் மாதச் சதுர்த்தி என்ற பெயரில் விநாயக வழிபாட்டிற்கு உகந்தவையாகக் கொண்டுள்ளோம். இதுமட்டுமன்று ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் சதுர்த்திகளும் முக்கியமானவையே. இவற்றை சங்கடஹர சதுர்த்தி என்று அழைப்பார்கள். விநாயக வழிபாட்டில் இவையும் சிறப்பிடம் பெற்றவைதான். இவ்வகைச் சதுர்த்திகளில் தலையாயது மாசி மாதத்தன்று பெளர்ணமி கழித்து வரும் தேய்பிறைச் சதுர்த்திதான். இதனை மஹாசங்கடஹரசதுர்த்தி என்று அழைக்கிறோம்.
மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தியிலிருந்து மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்திகளின்போது விரதமிருந்து விநாயகரைச் சிறப்பாக வழிபாடு செய்வார்கள்.
விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.
ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட மந்திரங்களும் தோத்திரங்களும் முறைகளும் உண்டு.
சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம். சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். அவரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு 'அங்காரகச் சதுர்த்தி' என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.
சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் பூஜிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.
சங்கடஹர சதுர்த்தியன்று விடியுமுன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சந்திரனைப் பார்த்துவிட்டு சந்திரனையும் பூஜித்துவிட்டு உணவு உட்கொள்ள வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் விநாயகருக்கு உகந்த 'காரியசித்தி மாலை' என்ற துதியைப் படிக்க வேண்டும். அதனை எட்டு முறை அன்றைய தினம் படிப்பது மேலும் சிறப்பு.
சங்கடநாசன கணபதி ஸ்தோத்திரத்தையும் படிக்கலாம்.
இவை வலுவும் ஆற்றலும் மிக்கவை. இரண்டில் ஒன்றைப் படிக்கலாம்.
முடிந்தவர்கள் இவற்றில் ஒன்றுடன் விநாயகர் கவசத்தையும் படிக்கலாம். விநாயகருடைய முப்பத்திரண்டு வகையான மூர்த்தங்களில் சங்கடஹர கணபதியும் ஒன்று.
இளஞ்சூரியனைப் போன்ற நிறத்தோடு நீல நிற ஆடையணிந்து கொண்டு செந்தாமரையில் வீற்றிருப்பார். வலது கரங்களில் அங்குசமும் வரதமும் விளங்கும். இடது மேல் கரத்தில் பாசம் இருக்கும். தொடையின் மீது தன்னுடைய சக்தியை அமர வைத்திருப்பார். செம்மை நிறமுடைய அந்த சக்தி நீல நிற உடையும் ஆபரணங்களும் அணிந்து நீல மலரை ஏந்தியிருப்பார்கள். சங்கடநாஸனார் தமது இடது கீழ்க் கரத்தால் அந்த சக்தியை அணைத்தவாறு பாயசப் பாத்திரத்தைத் தாங்கியிருப்பார். 'சங்கடஹர கணபதி' என்றும் 'சங்கடநாஸன கணபதி' என்றும் பெயர் பெற்ற இவரைத் தமிழில் நாம் 'தொல்லை நீக்கியார்' என்று அழைக்கிறோம்.
விநாயகரின் தத்துவம் விநாயகர் அட்டகத்தின்மூலம் இங்கு விளக்கப்படுகிறது. "காரியசித்தி மாலை" என்றும் இது அழைக்கப்படுகிறது.
காரியசித்திமாலை
1.
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பால் தக வருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றாம்.
2.
உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.
3.
இடர்கள் முழுதும் எவன் அருளால் எரி வீழும் பஞ்சு என மாயும்
தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக் கருமம் எவனால் முடிவு உறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றாம்.
4.
மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
5.
செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்
ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய் இல் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
6.
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பர
நாத முடிவில் வீற்று இருக்கும் நாதன் எவன் எண் குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
7.
மண்ணின் ஓர் ஐங் குணம் ஆகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
8.
பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய பரன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம் அடைகின்றோம்.

1 comment:

  1. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete