Saturday 9 April 2016

இன்று தசமி திதி
திதி நித்யா தேவதைகள்.
திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.
அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில்
ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து
(ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,
திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் 43 முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும்
15 தேவியர் தான் இந்த திதி நித்யா.
வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும்
அதிதேவதை மகா ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா
செல்ல வேண்டிய மந்திரம்
மஹா வஜ்ரேஸ்வரி நித்யா
ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
வஜ்ரநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
திதிகளுக்கான பலன்கள் வரிசையில் இன்று தசமி திதிகளுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.
தசமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...
நடக்கவே தசமியிலே ஜெனனமானோன்
நாட்டிலே புகழாக தர்மஞ்செய்வான்
கொடுக்கவே குணமுள்ளான் குற்றமில்லான்
கூடிய நேசரக் கின்பமுள்ளான்
அடுக்கவே யாசரஞ் சீலமுள்ளான்
அன்பாகும் பெரியோர்கள் நேயமுள்ளான்
தொடுக்கவே துணைவருள்ளான் தோஷமில்லான்
துலங்கிடும் பந்துக்கள் பிரியனாமே.
- அகத்தியர்.
தசமி திதியில் பிறந்தவர்கள் தர்மஞ்செய்யும் குணமுடையவர்களாகவும், கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும், சினேகிதர்களுடன் பிரியமுடையவர்களாகவும், ஆசாரமுடையவர்களாகவும், சீலம் உடையவர்களாகவும், பெரியோர்களிடத்தில் அன்பு கொண்டவர்களாகவும், குற்றம் இல்லாதவர்களாகவும், மனைவி, மக்கள், உறவினர்களிடம் பிரியமுடையவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்
Like
Comment

No comments:

Post a Comment