Tuesday 12 April 2016

மருத்துவ உணவுகள்..! 

பிரண்டைத் துவையல்..!

தேவையானவை: 

முற்றாத பிரண்டை - 50 கிராம்,
மிளகு - 20,
பச்சை மிளகாய் - 3,
உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்:

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

No comments:

Post a Comment