Tuesday 12 April 2016

தீவினை அழிக்கும் புவனை யந்திரம்
சித்தர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும்.ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு யந்திரத்தின் மூலம் ஒருவர் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.அத்தகைய யந்திரம் பற்றி அகத்தியர்தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.
தெரிசிக்க இன்னமொரு கருவைக்கேளு சிவசிவா புவனைபதி னாறுவீட்டில் தெரிசிக்க வேணு மென்னா லந்தவீட்டில்செம்மையுடன்
ஓம்கிலி சிறிறீங்கென்று தெரிசிக்கப் பதினாறு வீட்டிலேதான்சிந்தையுடன் கால்தலையாய் மாரிக்கொண்டு தெரிசிக்க மானதமாய்ப் பூசைசெய்து திருவேற நூற்றெட்டு உருவேசெய்யே.-அகத்தியர்.உருவேத்திப் புவனையுட சக்கரத்தைஉண்மையுடன் மானிடர்க்குக் காட்டினாக்கால்கருவொத்து நின்றுபல வியாதியெல்லாம்கண்காணா தோடுமடா கருத்தாய்ப்பாருவருவித்த வஞ்சனைகள்ள பில்லிஏவல்மகத்தான பிசாசுகளு மதிகெட்டோடும்திருவுத்த குருவருளால் புவனைதானும்தீர்க்கமுட வினைத்தபடி செய்வாள்பாரே.-அகத்தியர்.இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணிவிரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை நாளில், கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்திட வேண்டும்.
"ஓம் கிலி சிறி றீங்"
இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் அனைத்தும் நீங்குவதுடன். அவர்களின் எதிரிகள், வஞ்சகர்கள் நீங்கிவிடுவார்களாம். பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடுமாம். அத்துடன் புவனை அம்மனின் அருளும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.

No comments:

Post a Comment