Saturday, 9 April 2016

ஆன்மீக ஞானி,

        வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். 

 உங்கள் அனைவரையும் இந்தப் பதிவின் மூலம் 


சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


    கிட்டத்தட்ட உங்க எல்லாரையும் கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டுப் போக வேண்டிய, கஷ்டமான ஒரு யாத்திரை மாதிரி இந்த பதிவு. கடவுள் கண்ணை திறந்திட்டாருயான்னு உங்களை நிஜமாகவே திக்கு முக்காட வைக்கலாம்.

     "ஹோ' ன்னு சந்தோசத்தில துள்ளிக் குதிக்கிற மாதிரி , வாழ்க்கைக்கு உருப்படியான ஒரு விஷயத்தைப் பற்றி இந்த கட்டுரை...!

     அவனன்றி ஒரு அணுவும் அசையாது. துரகிாி சுந்தரமஹாலிங்கரின் ஆசியுடன் இந்த கட்டுரையைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு சரியான தீர்வு, மிக சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என மனமார வேண்டி, தொடங்குகிறேன்...!

     வாழ்க்கையிலே மிகப்பெரிய லட்சியம் ஒன்றை அடைவதற்காக, என் ஒட்டு மொத்த கவனத்தையும் அந்த புள்ளியில் குவித்துள்ளேன்.

      பாட்ஷா படத்துலே ரஜினி சார் கிட்டே , அவர் தம்பி ஒரு டயலாக் சொல்லுவார். "ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர்ஸ் எல்லாம் மிரண்டு போய்  இருக்கிறாங்க. நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாம் வெறி ஊறின ஒருத்தனாலத்தான் இப்படி அடிக்க முடியும்னு..."
அந்த மாதிரி........நாடி, நரம்பு  முழுக்க ....... ஒரே சிந்தனை....!
"யானை வேட்டைக்கு கிளம்புங்க பாஸூ ,  எத்தனை நாளைக்குத் தான் முயலை வேட்டையாடிக்கிட்டு இருப்பீங்கன்னு..."தலைவன் வள்ளுவர் ஒரு குறள்ல சொல்லி இருப்பாரு...! அந்த மாதிரி , ஒரு மிகப் பெரிய டார்கெட்.

(கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவே லேந்தல் இனிது....  )

   கிட்டத்தட்ட அடிவாரத்தை நெருங்கிவிட்டேன். ஏற ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி.வேலை முழுவதும் முடிந்தபிறகு, விரைவில் உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்.

           உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு சகோதரனாக , உங்கள் இந்த முன்னேற்றத்திற்கு , மன நிம்மதிக்கு , அந்த பரம்பொருள் என்னையும் ஒரு சிறிய கருவியாக ஆக்கிக் கொண்டதில், எனக்கும் மகிழ்ச்சி.


      சரி, சுய புராணத்தை விடுங்க... ! நானும் போக வேண்டிய தூரம்...அடேயப்பா.. ! இன்னும் எவ்வளவோ இருக்கு..!

    வாழ்க்கையில் அக்கறையும், நம்பிக்கையும் இருப்பவர்களுக்கு, இறைவனின் கரம் தோளில் நிச்சயம் விழும். சாதித்த ஒரு மகனை உச்சி முகரும் தந்தையாக இறைவனும் பெருமிதம் கொள்வார். நல்லவங்களும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். நீங்களும் நிச்சயம்  ஒருநாள், இதை விரைவில்  உணர்வீர்கள்.

     பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லைன்னு நெத்தியிலடிச்ச மாதிரி வள்ளுவர் சொல்லியிருக்கிறார். நாமளே வெறுப்புல கட்டின மனைவிக்கிட்டேயோ, இல்லை அம்மா அப்பாக்கிட்டேயோ கோபத்தில கத்தியதுக்கு பணம் மட்டுமே பல சமயங்களில் காரணமாக  இருந்திருக்கும். எவ்வளவு அவமானம், வேதனை - கையாலாகாமல் பணம் சம்பாதிக்காமல் , நெருக்கடியான பல சமயங்களில் கடவுளேன்னு கதறி இருந்திருப்போம். இல்லையா?

     கையில் பணம் புரளணும். என்ன வழி? இதுதான்னு யாரும் உறுதியா சொல்லி இருக்கிறாங்களா? யாரையும் ஏமாத்தாமல்,எவர் வயிற்றிலும் அடிக்காமல், முழுக்க முழுக்க நம் திறமை, முயற்சி மட்டுமே வைத்துக் கொண்டு , இந்த காலத்தில் ஒருவனால் முன்னுக்கு வர முடியுமா? கண்டிப்பாக முடியும். அதை உங்களுக்கு சொல்லிக் கொடுக்க முயற்சி செய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

      சரி, அதிகமா பணம் சம்பாதிக்க என்னென்ன வழிகள்  இருக்குது? 
அரசியல்,சினிமா, ரியல் எஸ்டேட்,கந்து வட்டி , அடிதடி ,கட்டப் பஞ்சாயத்து, திருடுறது, சூதாட்டம், ஷேர்  மார்க்கெட்..... இப்படி நிறைய ...! அடடா சொல்ல மறந்துட்டேனே...  ஆன்மிகம், மடம் , கோயில்... சாமி பேர்ல அராஜகம்..

    நம்மளை மாதிரி லோயர் மிடில் கிளாஸ் , (அடே! என்ன கூச்சம் வேண்டிக் கிடக்குது? ) சரி, சரி.. வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கிற ஆளுங்களுக்கு எல்லாம் , எதுவுமே வேலைக்கு ஆகாது. 
இந்த.... ஷேர் மார்க்கெட் ? அதைப் பத்தி அவ்வளவா தெரியாது. ஆனா, ஷேர்ல நெறையா லாஸ் ஆகிடுச்சுன்னு சொன்ன நெறைய பேரைப் பத்தி கேள்விப் பட்டு இருப்போம். நூத்துக்கு , தொண்ணூத்தொம்பது பேர்.

"அது ஒரு பக்கா சூதாட்டம் தம்பி..."

      இவ்வளவுதான் தெரியும். அதோட நெளிவு, சுளிவு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. நமக்கும் கத்துக்கிட ஆர்வம் இல்லை. பங்கு சந்தை அவ்வளவு புள்ளி , ஏறி இருக்குது. இவ்வளவு புள்ளி இறங்கி இருக்குது. தங்கம் ( அப்படின்னா? ) விலை இன்னைக்கு கூடி இருக்குதுங்கிறான்.... திடீர்னு  குறைஞ்சிடுச்சுங்கிறான்...என்ன? எதுக்கு , ஒன்னும் புரியலை ? 
ஆந்திரா காய்கறி எல்லாம் வரலைன்னு - பச்சை மிளகாய் கிலோ ஆயிரம் , ஐநூறுன்னு விக்குது... என்ன கொடுமை சார் இது? இப்படியே வேடிக்கை பார்த்துக்கிட்டே தான் நாம இருக்கப் போறோமா? நாம சம்பாதிச்சு , வீடு கார்ன்னு செட்டில் ஆகவே முடியாதா?

    இன்னையில் இருந்து ஒரு அஞ்சு வருஷம் வரைக்கும் பொறுமையா இருந்தா , கண்டிப்பா முடியும். ஷேர் மார்க்கெட்லேயே சம்பாதிக்கலாம். துளி கூட ரிஸ்க் இல்லாம ,( நான் சொல்றது 100% பக்காவா )- ஒரு ரூபாய் கூட லாஸ் இல்லாம, சம்பாதிக்கிறதுக்கு இதே ஷேர் மார்க்கெட்ல வழி இருக்கு. ஒரே ஒரு கண்டிஷன் தான் . பொறுமை வேணும். பேராசைப் படக் கூடாது.  
பல மணி நேர உழைப்பு, பண நஷ்டத்துக்கு அப்புறம் , கண்டு பிடிச்சு இருக்கிற, ஆணித்தரமான சக்சஸ் பார்முலா இது. அதனாலதான், இவ்வளவு "Confident" டா உங்க கிட்ட சொல்றேன்....

       இன்னைக்கு தேதியில - பத்தாயிரம் எவ்வளவு பெரிய தொகை? கொஞ்சம் பெரிய அமௌண்ட் தான். சரி, ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னே? பத்தாயிரம் ரூபாய் பெரிய தொகையா? ஆமா, கண்டிப்பா... கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் - அஞ்சு வருஷத்துக்கு முன்னே இல்லே, பத்து வருஷத்துக்கு முன்னே கூட நாம இதே நிலைமையில தான் இருந்து இருக்கிறோம்.....நம்ம நிலைமை தெரியாதா? என்னைக்குமே அது பெரிய தொகை தான். மாசக் கடைசியிலே, ஆயிரம் ரூபாயே பெரிய தொகை தான். இல்லையா?என்ன அன்னைக்கு, நூறு , இருநூறுன்னு கடன் வாங்கி இருந்தா, இன்னைக்கு ஆயிரம்.... அதுபோக, ஹவுசிங் லோன், டூ-வீலர் லோன், பர்சனல் லோன், கிரெடிட் கார்ட் கடன், அதுபோக நண்பர்கள் கிட்ட கைமாத்து... .த்ஸூ .அப்பா...! முடியலை..! அட, இவ்வளவு கடன் வாங்கி இருந்தா பெரிய ஆளு தான்யா..! 
       
       எனக்கு பேங்க்ல லோன் கூட தர மாட்டேங்கிறாங்கிறீங்களா? விடுங்க பாஸூ , நாமளும் அம்பானி மாதிரி ஒருநாள் அந்த பேங்க்கை வாங்கிடுவோம்.
சரி,ஒரு பேச்சுக்கு பத்து வருஷத்துக்கு முன்னே, நான் சொல்ற இந்த மெத்தட்ல - ஒரு பத்தாயிரம் போட்டு இருந்தோம்னா, அது இன்னைக்கு தேதியில - கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடிச்சுக்கோங்க.... 2.61 கோடி.. வருமான வரி எல்லாம் பிடித்தது போக. நீங்க போட்ட காசு கிட்டத்தட்ட 2619 times அதிகமா ஆகியிருக்கும்.

       இரண்டரை கோடியில் , இன்னைக்கு நீங்க கார், வீடு எல்லாம் வாங்கிவிடலாம் இல்லையா? நீங்க போட்ட பணம் பத்தாயிரம் மட்டுமே... !

    ஆம், இது சாத்தியம். கம்ப்யூட்டர்ல excel sheet ல ஒரு கால்குலேஷன்  போடுங்க.ஒவ்வொரு மாசமும் பத்து சதவீதம் கூட்டிக்கிட்டே வாங்க. முதல் மாதம் பதினோராயிரம். அதுக்கு அடுத்த மாதம் 12,100, அதுக்கு அப்புறம் 13,120... ஒவ்வொரு வருடத்துக்கும் முடிவில் 30% வருமான வரிக்கு கழிச்சுக்கோங்க.! என்ன சரியா வருதா? 
இன்னைக்கு 'ஒரு லட்சம்' ங்கிறது ஒரு பெரிய தொகை தான். சமாளிக்கலாம். இதுவே பத்து வருஷம் கழிச்சு 26 கோடி ஆகுது. 'Confirm' மா சொல்லலாம். பத்து வருஷம் இல்லே, எத்தனை வருஷம் ஆனாலும் இருபத்தாறு கோடி நம்மாலே ஆகாது. நம்ம வண்டவாளம், நமக்கா தெரியாது? ஆனால், நீங்களும்கோடீஸ்வரனாகலாம். உங்க பரம்பரையே உங்களை கும்பிடும். கவலைப்படாதீங்க..!

      சரி, பத்து சதவீதம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கணுமே..? கந்து வட்டி கொடுக்கிறவங்க சம்பாதிக்கிற மாதிரி..! (அட, அவங்க இதை விட சம்பாதிக்கிறாங்க இல்லே?)  - நான் சொல்ற மெத்தட்ல - சொல்லி அடிக்கலாம் பத்து சதவீதம்.

      இன்னைக்கு வீட்டில ஸ்கூல்ல படிக்கிற பசங்க இருந்தா , அவங்க காலேஜ் சேரும்போது , அஞ்சு லட்சம் , பத்து லட்சம்னு தேவைப்படுமே... பெண் குழந்தைங்க இருந்தா, கல்யாண நேர செலவுக்கு - பத்து லட்சமாவது ஆகுமே..! இன்னைக்கு இருபது ஆயிரம் போட்டால், அஞ்சே வருஷத்தில் அது பத்து லட்சம். .........! நீங்க போடுற இருபது ஆயிரம், உங்க காசு இல்லைன்னு நெனைச்சுக்கோங்க... ஏதோ அவசரத்துக்கு , ஆஸ்பத்திரிக்கு செலவு செஞ்சாச்சுன்னு நெனைச்சு ..மறந்திடுங்க.!

         நீங்க போடும் பணத்தை , 51 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்.. அது ஐந்து வருடம் கழித்து உங்களுக்கு வரவிருக்கும் பணம். பத்து வருஷம் கழிச்சு வந்தா போதுமா? நீங்க போடுற பணத்தை 2,619 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள். ஹ்ம்ம்.... நிசமாத்தான்..!
என்ன பத்து வருஷம் முன்னாலே நமக்கு சொல்லித்தர ஆள் இல்லே...! சரி, போனது  போகட்டும். நடக்கப் போவதைப் பார்ப்போம்.

         கீழே ஒரு சார்ட் கொடுத்திருக்கிறேன்...... படத்தை க்ளிக் செய்தால் பெரியதாக தெரியும். .பாருங்கள்...!
ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்க்கவே சந்தோசமா இருக்குது இல்லே! எல்லாம் இன்னும் கொஞ்சம் நாளில் சரி ஆகிவிடும்னு நம்பிக்கை வருகிறதா? பெரிய பெரிய கோவில்களுக்குப் போகும்போது VIP தரிசனம் நமக்கும் கிடைக்கப் போகுது. நம்மை சுத்தி இருக்கிறவங்க, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய மனம் இருந்தும் பணம் இல்லாத நிலைமை மாறப் போகிறது....!

      சரி, நீங்க சொல்றதால நம்பலாம். அப்படின்னு நம்பிக்கை இருக்கா? என்ன செய்யனும்? 

        சிம்பிள் கண்டிஷன் தான்...... பேராசைப் படக் கூடாது! ஒரே மாசத்துல அள்ளணும்னு நினைச்சா.... ஒண்ணுமே இல்லாம ஆகிடும்..! கிட்டத்தட்ட தவம் மாதிரி பொறுமை வேணும்..!  அப்புறம், PAN CARD இருக்கணும். அட்ரஸ் proof க்கு ஒரு ID இருக்கணும்.வேறு ஏதாவது பேங்க்கில் அக்கௌன்ட் இருந்தால் , குறைந்தது ஒரு ஆறு மாதத்துக்கு transaction இருக்கணும். அப்புறம், நான் சொல்றதை மட்டும் கேட்டாப்  போதும். இடையில் நீங்க எந்த நேரத்தில்  வேண்டுமானாலும், உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்..!

          விளக்கமா சொன்னாத்தானே புரியும்? இல்லையா? 

         ஊர்ல என் கூட படிச்ச நண்பர்கள் கிட்டே விஷயத்தை சொன்னேன்.தறி ஓட்டிக்கிட்டு இருக்கிறவங்க.. PANCARD , அக்கௌன்ட் எல்லாம் வேலைக்கு ஆகாது. என் பையன் ஒன்னாப்பு படிக்கிறான். பொண்ணுக்கு ரெண்டு வயசு. இருபதாயிரம் இந்தா. புள்ளை நல்லாப் படிச்சா அவனை இஞ்சினியருக்கு படிக்க வை. உன்னை மாதிரி நல்ல வேலை ஒன்னு வாங்கிக் கொடு. பொண்ணுக்கு கல்யாணத்துக்கு காசு கொடு. ரெண்டு பேர் பேர்லயும் பேங்க்ல காசு போட்டு வைச்சதா நினைச்சுக்கிறேன். இல்லையா, உனக்கு எப்போ தோணுதோ, இந்த காசை திருப்பிக் கொடுன்னு கொடுத்து இருக்கிறாங்க... என் பேர்ல அந்த அளவுக்கு நம்பிக்கை...! அவங்களுக்கும் சேர்த்து, இப்போ நான் சம்பாதிக்கணும்...! நம்பிக்கையை காப்பாத்தணும் இல்லே..!

      பணம் சம்பந்தப்பட்ட விஷயம், நேர்ல சொன்னாத்தான் நல்லாப் புரிய வைக்க முடியும். முதல்ல, எவ்வளவு பேரு இதில் ஆர்வமா இருக்கிறீங்கன்னு தெரியணும். அதை தெரியப் படுத்துங்க.... Comments அல்லது மின்னஞ்சல் (Mail ID :aanmikagnani@gmail.com) மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்...!

                     உங்கள் அன்பு சகா...! ஆன்மீக ஞானி

No comments:

Post a Comment